உலகம்

டுவிட்டர் சி.இ.ஓ பதவிக்கு ஒரு முட்டாளை கண்டுபிடித்தவுடன் பதவி விலகுவேன்: எலான் மஸ்க்

Published

on

டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவிக்கு ஒரு முட்டாளை தேர்வு செய்த பின்னர் அந்த பதவியில் இருந்து நான் விலகிவிடுவேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் எலான் மஸ்க் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டரை 44 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கினார் என்பதும் அதன் பிறகு சிஇஓ உள்பட பல அதிகாரிகளை அவர் அதிரடியாக வேலை நீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எலான் மஸ்க் தற்போது டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்து வரும் நிலையில் அவர் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் நான் சிஇஓ பதவியிலிருந்து விலக வேண்டுமா என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு 57.5% டிவிட்டர் பயனாளிகள் விலக வேண்டும் என்றும் வேண்டாம் என 42.5 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்து விலக தயார் என்றும் ஆனால் அதற்கு முன்னர் ஒரு முட்டாளை இந்த சிஇஓ பதவிக்கு நான் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் நான் சாஃப்ட்வேர் மற்றும் சர்வர்களின் டீம்களை மட்டும் மேற்பார்வையிடும் வேலையை மட்டும் பார்ப்பேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். அவரது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version