உலகம்

நான் வீழ்வேன் என்று நினைத்தாயா? மீண்டும் முதலிடத்தை பிடித்த எலான் மஸ்க்..!

Published

on

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என பல ஆண்டுகளாக தக்க வைத்துக் கொண்டிருந்த எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது நம்பர் ஒன் இடத்தை இழந்தார் என்பதையும் அவருடைய இடத்தை பிரஞ்சு தொழில் அதிபர் பெர்னார்ட் அர்னால்ட் என்பவர் பிடித்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் மீண்டும் எலான் மஸ்க் தனது நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 44 பில்லியன் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதை அடுத்து அவருடைய சொத்து மதிப்பு குறைந்தது. அதுமட்டும் இன்றி டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளும் அமெரிக்க பங்குச் சந்தையில் மிக மோசமாக சரிந்தது. இதன் காரணமாக அவர் தனது சொத்துக்களின் மதிப்பை இழந்து கொண்டே வந்ததால் நம்பர் ஒன் இடத்தையும் இழந்தார்.

ஆனால் கடந்த ஜனவரியில் இருந்து டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் படிப்படியாக உயர்ந்து வருகிறது என்றும் இரண்டே மாதங்களில் டெஸ்லா நிறுவன பங்குகள் நூறு சதவீதம் உயர்ந்ததன் காரணமாக தற்போது மீண்டும் நம்பர் ஒன் இடத்தை எலான் மஸ்க் பிடித்துள்ளார்.

உலகின் கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி இருந்தாலும் டெஸ்லா நிறுவனத்தின் கார்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உலகம் முழுவதும் இருந்ததை அடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் படிப்படியாக உயர்ந்தது. இதன் காரணமாக தற்போது எலான் மஸ்க் நிகர சொத்து மதிப்பு 187.1 பில்லியன் டாலர் என வந்துள்ளது இதனால் உலகின் பணக்காரர் பட்டியல் அவரது பெயர் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது.

இரண்டாவது இடத்தில் உள்ள பிரெஞ்ச் தொழில் அதிபர் பெர்னார்ட் அர்னால்ட் அவர்களுக்கு 185.3 பில்லியன் சொத்து மதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்த உடன் மீண்டும் எலான் முதல் இடத்தை பிடிக்க மாட்டார் என்று தான் பலர் கணித்தனர். ஆனால் நான் வீழ்வேன் என்று நினைத்தாயா என்று சவால் விட்ட எலான் மஸ்க் தற்போது மீண்டும் முதல் இடத்தை அசைக்க முடியாத அளவிற்கு இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version