உலகம்

3500 ஏக்கரில் தனது பெயரில் புதிய நகரம்.. எலான் மஸ்க்கின் வேற லெவல் திட்டம்..!

Published

on

உலகின் முன்னணி கோடீஸ்வரரான எலான் மஸ்க் தனது பெயரில் புதிய நகரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக அவர் 3500 ஏக்கர் நிலத்தை வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் அறிக்கை ஒன்றின்படி எலான் மஸ்க் நிறுவனங்களான போரிங் கோ., டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களை ஒரே நகரத்தில் தங்க வைப்பதற்காக புதிய நகரத்தை உருவாக்க விரும்புகிறார் என்றும் 3500 ஏக்கரில் இந்த நகரம் உருவாக்கப்பட இருப்பதாகவும் அனைத்து வசதிகளும் கொண்ட இந்த நகரம் வரலாற்றில் பேசப்படும் நகரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த நகரத்தை அமெரிக்காவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கும் போக்குவரத்தையும் அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் சுரங்கப்பாதைகளும் கட்டுவதற்காக முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது. தனது பெயரிலேயே இந்த நகரத்தை அமைக்க விரும்புகிறார் என்றும் இந்த நகரத்தில் அனைத்து வசதிகளும் இருக்கும் என்றும் பணியாளர்களுக்கு தேவையான கட்டிடங்கள் உட்பட பல வசதிகளை செய்து தர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க வரலாற்றில் தனிநபர் ஒருவர் சொந்தமாக ஒரு நகரத்தையே உருவாக்குவது இதுதான் முதல் முறை என்பதால் இந்த செய்தி வெளியானதில் இருந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எலான் மாஸ்க் உருவாக்கும் நகரத்தில் முழுக்க முழுக்க அவரது நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மட்டுமே கொண்டது என்றும் வெளிநபர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் பெரு நகரில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த நகரத்தில் இருக்கும் என்றும் வெளிப்புற விளையாட்டு பகுதி, நீச்சல்குளம் என சுற்றுப்புற அம்சங்களும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர் நகரத்திற்கு இந்திய தொழிலதிபர் ஜாம்ஷெட்ஜி நுசர்வாஞ்சி டாடா பெயரிடப்பட்டது. டாடா குழுமத்தின் நிறுவனரான இவர் 1919ஆம் ஆண்ட் இந்நகரத்தை நிறுவினார். மேலும், உ.பி.யில் உள்ள மோடிநகர் நகரத்திற்கு ராய் பகதூர் குஜர் மால் மோடியின் பெயரிடப்பட்டது. அவர் இந்த நகரத்தை 1933 இல் நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version