வணிகம்

ஜெஃப் பிசோஸை பின்னுக்குத் தள்ளி, உலக கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடம் பிடித்த எலன் மஸ்க்.. யார் இவர்!

2017-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி உலக கோடீஸ்வர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ்.

Published

on

உலக கோடீஸ்வர்கள் பட்டியலில் ஜெஃப் பிசோஸை பின்னுக்குத் தள்ளி, எலன் மஸ்க் முதலிடம் பிடித்துள்ளார்.

2017-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி உலக கோடீஸ்வர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ்.

இந்நிலையில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் உலக கோடீஸ்வரர் பட்டியலில் இன்று முதலிடம் பிடித்துள்ளார் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

சென்ற ஒரு ஆண்டில் மட்டும் எலன் மஸ்க் சொத்து மதிப்பு 150 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. இன்று டெஸ்லா நிறுவனப் பங்குகள் 5 சதவீதம் அதிகரித்ததால், எலன் மஸ்கின் சொத்து மதிப்பு 184 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

எலன் மஸ்க் பயன்படுத்தப்பட்ட விண்கலன்களை, மீண்டும் பயன்படுத்தி குறைந்த செலவில் ராக்கெட் தயாரிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தையும் இயக்கி வருகிறார்.

Trending

Exit mobile version