உலகம்

‘இத யார் பண்றாங்ளோ அவங்களுக்கு 100 மில்லியன் டாலர் தர்றேன்’ எலான் மஸ்க் பரிசுத்தொகை அறிவிப்பு

Published

on

கார்பன் கேப்ட்சர் டெக்னாலஜியை சொல்பவர்களுக்கு 100 மில்லியன் டாலர் தருவதாக எலான் மஸ்க் பரிசுத்தொகை அறிவித்துள்ளார்.

தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் ஒன் இடத்திற்கு வந்திருப்பவர் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா மட்டுமில்லாமல் உலக மக்களுக்கு விண்வெளி கனவுகளை ஸ்பேஸ் எக்ஸ் மூலமாக நனவாக்கி வருகிறார். இந்த நிலையில், தற்போது 100 மில்லியன் டாலர் பரிசுத்தொகையாக வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒருபதிவிட்டுள்ளார். அதில் அவர். ‘சிறந்த கார்பன் கேப்ட்சர் டெக்னாலஜியை சொல்பவர்களுக்கு 100 மில்லியன் டாலரை பரிசாக வழங்குகிறேன்’ என்று கூறியுள்ளார். இதுதொடர்பான முழுமையான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

எலான் மஸ்க்கின் இந்த ட்வீட் தான் இப்போது டிரெண்டிங் ஆகி வருகிறது. அவர் பதிவிட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களையும், லைக்ஸ்களையும் பெற்றது.   அவரது டுவிட்டுக்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அமெரிக்க காடுகள் பாதுகாப்பு தொண்டு நிறுவனம் கார்பன் கேப்ட்சரைப் பற்றி ஒரு தலையங்கம் வெளியிட்டள்ளது. அதன்படி, இயற்கையிலேயே கார்பனை கேப்ட்சர் செய்யும் மரங்கள் உள்ளன, அதை விட சிறந்ததொரு கார்பன் கேப்ட்சர் கிடையாது. இதனை சுட்டிக்காட்டிய நெட்டிசன்கள் அனைவரும் மரம் நடுவோம் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending

Exit mobile version