உலகம்

அமேசான் நிறுவனரை முந்தி உலகின் முதல் பணக்காரர் ஆனார் எலான் மஸ்க்!

Published

on

டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் உலகின் முதல் பணக்காரர் இடத்துக்கு வந்துள்ளார்.

இதுவரையில் உலகின் பணக்காரராக அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பிசோசா இருந்து வந்தார். அவருடைய சொத்து மதிப்பு 187 பில்லியன் டாலர் ஆகும். அதற்கு அடுத்தப்படியாக டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் இருந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று டெஸ்லா நிறுவனத்தின் பங்கு உயரத்தொடங்கியது. கடந்தாண்டு மட்டும் டெஸ்லாவின் பங்கு 74 சதவீதம் உயர்ந்த நிலையில், தற்போது அமேசானையும் முந்தி முதல் இடத்திற்கு வந்து விட்டது. நேற்று காலை நிலவரப்படி எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 188.5 பில்லியன் டாலருக்கு வந்தது.

இது அமேசான் நிறுவனர் ஜெப் பிசோசாவின் சொத்து மதிப்பைக் காட்டிலும் 1.5 பில்லியன் அதிகமாகும். இதனால் உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்தை எலான் மஸ்க் பெற்றுள்ளார். எலான் மஸ்க் விண்வெளி ஆராய்ச்சி, மின்னல் வேகத்திலான, ஹைப்பர் லூப் பயணம், செவ்வாய் கிரகத்தில் மனிதர்களைக் குடியேற வைக்கும் முயற்சி உள்ள கனவுத் திட்டங்களை நனவாக்கும் பணியில் உள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version