உலகம்

டெஸ்லா கார் வாங்குங்கள் என ஜோ பிடனுக்கு அறிவுரை சொன்ன எலன் மஸ்க்!

Published

on

அமெரிக்காவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, நாடு முழுவதும் 5 லட்சம் எலக்ட்ரிக் வாகன் சார்ஜிங் மையம் அமைக்கப்படும் என ஜோ பிடன் தெரிவித்து இருந்தார்.

ஆனால் அதற்கான பட்ஜெட் எவ்வளவு, எப்போது இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றெல்லாம் அவர் அறிவிக்கவில்லை.

ஜோ பிடனின் இந்த அறிவிப்பைப் பார்த்த டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க், ‘டெஸ்லா காரை வாங்குங்கள்’ என அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

மேலும் டெஸ்லாவில் ஓப்பன் சொர்ஸ் சார்ஜிங் கனக்டர் உள்ளது. இது பிற எலக்ட்ரிக் வாகனங்களையும் டெஸ்லா சூப்பர் சார்ஜிங்கை பயன்படுத்த உதவியாக இருக்கும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையின் போது, ஜோ பிடன், டெஸ்லாவின் போட்டியாளர்களான ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டு உள்ளிட்ட நிறுவனங்கள் 18 பில்லியன் டாலர் முடலீட்டை எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக டிவிட்டரில் கருத்து கூறிய எலன் மஸ்க், ஸ்டேட் ஆஃப் யூனியனை கண்டுகொள்வதே இல்லை என கிண்டல் அடித்து இருந்தார்.

டெஸ்லா எலக்ட்ரிக் கார 100 மைல் வரை ஆட்டோ பைலட் முலம் காரை இயக்கும் சேவையை 2020-ம் ஆண்டு முதல் அறிமுகம் செய்திருந்த நிலையில், இப்போது முழுமையான ஆட்டோ பைலட் முறையை வட அமெரிக்காவின் சில பகுதிகளில் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version