சினிமா செய்திகள்

கேன்ஸ் பட விழாவில் மயங்கி விழுந்த ஹாலிவுட் நடிகைக்கு என்ன ஆச்சு தெரியுமா?

Published

on

உலகளவில் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹாலிவுட் நடிகை எல்லி ஃபானிங் திடீரென மயங்கி விழுந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஏஞ்சலினா ஜோலியின் மெலஃபிசியன்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்த எல்லி ஃபானிங், கேன்ஸ் திரைப்பட விழாவின் நடுவர் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

நேற்று நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லி ஃபானிங், திடீரென மயங்கி விழுந்ததால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விருந்து நிகழ்ச்சியும் உடனடியாக ரத்து செய்யப்பட்டது.

எல்லி ஃபானிங்கிற்கு அருகில் இருந்த ஹாலிவுட் நடிகர் காலின் பர்த், உடனடியாக அவருக்கு முதலுதவி செய்தார். பின்னர், எல்லி ஃபானிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கோலாகலமாக நடைபெற்ற விருந்து விழா, சட்டென்று களேபர பூமியாக மாறியது. எல்லி ஃபானிங்கிற்கு என்ன ஆனது என பலரும் கவலையடைந்து வந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கொஞ்ச நேரத்தில் தான் நலமாக உள்ளதாக எல்லி ஃபானிங் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் தகவல் தெரிவித்தார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version