தமிழ்நாடு

அதிகாலையிலேயே டோர் டெலிவரி செய்த சிக்கன்: அதிரடி நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம்!

Published

on

திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அதிகாலையிலேயே ஒவ்வொரு வீட்டிலும் அரை கிலோ சிக்கன் திமுகவினர் கொடுத்ததாகவும் இதுகுறித்து தகவல் அறிந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இன்று தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் என்ற பகுதியில் வாக்காளர்களுக்கு சிக்கன் பொட்டலங்கள் கொடுக்கப்படுவதாக அதிமுகவினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

வாக்காளர்களுக்கு லஞ்சம் ஆக ஒவ்வொரு வீட்டிலும் அரை கிலோ சிக்கன் திமுகவினர் விநியோகம் செய்து வருவதாக கூறப்பட்ட புகாரை அடுத்து தேனி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று ரெய்டு நடத்தினர். இதனையடுத்து 50 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அந்த சிக்கன் அனைத்துமே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறிய போது எங்கள் கட்சியினர் யாரும் சிக்கன் வினியோகம் செய்ய வில்லை என்றும் இதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் நாளில் அதிகாலையிலேயே 50 கிலோ சிக்கன் வாக்காளர்களுக்கு கொடுக்க திட்டமிட்டதை தேர்தல் அதிகாரிகள் முறியடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Trending

Exit mobile version