தமிழ்நாடு

கோவையில் கண்மூடித்தனமாக யானையைத் தாக்கும் பாகன்கள் – கலங்க வைக்கும் வீடியோ!

Published

on

கோவையில் யானை ஒன்றை இரு பாகன்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ பார்ப்போரை கண்கலங்க வைக்கும் வகையில் உள்ளது.

தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும், கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடத்தப்படும். அதன்படி, இந்தாண்டு யானைகள் புத்துணர்வு முகாம், கோயம்புத்தூர் மாவட்டம், தேக்கம்பட்டி பவானியற்றாடு படுகையில் கடந்த 8 ஆம் தேதி ஆரம்பித்தது.

இந்த புத்துணர்வு முகாம்கள் மூலம், யானைகளுக்கு சற்று அசுவாசப்படுத்திக் கொள்ள சூழல் ஏற்படுத்தித் தரப்படும். அப்படியான ஒரு முகாமில் பார்ப்போரை அதிர்ச்சியடையச் செய்யும் வகையிலான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஜெயமால்யதா என்கிற யானை உள்ளது. அந்த யானையும் இந்தப் புத்துணர்வு முகாமில் கலந்து கொண்டது. இந்நிலையில் ஜெயமால்யதாவை அதன் பாகன்கள் ராஜா மற்றும் காவடி, புத்துணர்வு முகாமில் குச்சியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காணொலி வெளிவந்ததில் இருந்து, சம்பந்தப்பட்ட பாகன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் ராஜா மற்றும் காவடியைப் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version