தமிழ்நாடு

சென்னையில் தீப்பற்றி எரிந்த மின்சார வாகனம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Published

on

இந்தியாவில் சமீப காலமாக எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் அவ்வப்போது, எலக்ட்ரிக் வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரியும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இது, எலக்ட்ரிக் வாகனங்களின் மீது மக்களுக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

மின்சார வாகனம் தீப்பிடிப்பு

தமிழ்நாட்டில் சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வருபவர் வேலு (வயது 38). இவர் வியாசர்பாடியை அடுத்துள்ள முல்லை நகர்ப் பகுதியில் ஸ்டீல் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று காலை அவருடைய கம்பெனியில், அவர் பயன்படுத்தி வரும் மின்சார ஸ்கூட்டரில் சார்ஜ் செய்து கோவிலுக்கு சென்று உள்ளார்.

பின்னர் வீடு திரும்பும் போது முல்லை நகர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது மின்சார ஸ்கூட்டரில் இருந்து புகை வருவதை கண்டுள்ளார். உடனே வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு பார்த்துள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே மின்சார ஸ்கூட்டர் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வேலு, உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள், எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.

இன்று சென்னையில் நடந்தது போல், இதற்கு முன்னும் ஆங்காங்கே மின்சார வாகனங்கள் தீப்பற்றி எரிவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கானத் தீர்வு இன்னும் கண்டறியப்படாத நிலையில், பொதுமக்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version