இந்தியா

500 ரூபாய் அபராதம் விதித்த ஆய்வாளர்: மொத்த காவல்நிலையத்திற்கும் ஆப்பு வைத்த நபர்!

Published

on

தலைக்கவசம் அணியவில்லை என 500 ரூபாய் அபராதம் விதித்த காவல்துறை உதவி ஆய்வாளர் உள்ள காவல் நிலையத்திற்கு ஆப்பு வைத்த நபர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி என்ற பகுதியில் தலைக்கவசம் அணியாமல் மின்வாரிய ஊழியர் ஒருவர் சென்றதாக தெரிகிறது. இதனை அடுத்து காவல்துறை உதவி ஆய்வாளர் அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தார்.

மின்வாரிய ஊழியர் காவல்துறை ஆய்வாளரிடம் எந்தவிதமான வாக்குவாதம் செய்யாமல் 500 ரூபாய் அபராதத் தொகை கட்டிவிட்டு அதன் பின் நேராக சென்று காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்ட மின் இணைப்பைத் துண்டித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் மீட்டர் இல்லாமல் திருட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்தே அந்த மின் இணைப்பை துண்டித்து உள்ளதாகவும் அவர் கூறினார்.

காவல் நிலையத்தில் மின்சார மீட்டர் இல்லாமல் திருட்டுத்தனமாக மின்சாரத்தை பயன்படுத்தினர் என்றும் அதற்காக மேலதிகாரிகளிடம் ஆலோசித்தே மின்சாரத்தை துண்டித்து உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து காவல் நிலையம் தற்போது இருட்டில் மூழ்கியுள்ளது. அதுமட்டுமின்றி சட்டவிரோதமாக மின் இணைப்பு பெற்று மின்சாரத்தை உபயோகித்தற்காக காவல்நிலையத்திற்கு மின்வாரியம் தரப்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 500 ரூபாய் அபராதத்தை மின் ஊழியருக்கு விதித்ததன் காரணமாக தற்போது காவல்நிலையம் பெரும் சிக்கலில் உள்ளது.

 

Trending

Exit mobile version