தமிழ்நாடு

மீண்டும் நடுரோட்டில் தீப்பிடித்த எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: திருப்பூர் நபர் செய்த புத்திசாலித்தனமான காரியம்!

Published

on

கடந்த சில நாட்களாக திடீர் திடீரென மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து வரும் நிலையில் இன்று திருப்பூரில் மேலும் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே என்பதால் அதற்கு மாற்றாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்போது விற்பனையாகி வருகின்றன என்பதும், பொதுமக்கள் அதனை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் சமீபகாலமாக அடுத்தடுத்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் திடீர் திடீரென தீப்பிடித்து பொதுமக்களின் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த தீ விபத்தால் ஒருசில உயிர்களும் பரிதாபமாக பலியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் இன்று திருப்பூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த ஸ்கூட்டரில் இருந்து புகை வந்தது. இதனை பொதுமக்கள் எச்சரித்து செய்ததால் அவர் உடனே வண்டியிலிருந்து கீழே இறங்கினார். அப்போது அவர் புத்திசாலித்தனமாக உடனே வண்டியிலிருந்து பேட்டரியை மட்டும் தனியே கழட்டி விட்டார். இதனால் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு எந்தவிதமான ஆபத்துமின்றி பேட்டரி மற்றும் எரிய தொடங்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பேட்டரியை தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதன் காரணமாக எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை. இருப்பினும் தொடர்ச்சியாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிடித்து வரும் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version