இந்தியா

இந்த டூவீலர்களை ஓட்ட லைசென்ஸ், இன்சூரன்ஸ், ரிஜிஸ்ட்ரேஷன் எதுவும் தேவையில்லை!

Published

on

டூவீலர் வாங்குவது ஒரு செலவென்றால், அதற்கு டிரைவிங் லைசன்ஸ் எடுக்க, ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய மற்றும் இன்சூரன்ஸ் எடுக்க என தனியாக ஒரு பெரிய தொகை செலவாகிறது. இந்த நிலையில் இன்சூரன்ஸ், ரிஜிஸ்ட்ரேஷன் எதுவும் இல்லாமல், ஏன் டிரைவிங் லைசென்ஸ் கூட இல்லாமல் இந்தியாவில் சில டூவீலர்கள் ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

ஒருசில எலக்ட்ரிக் டூவீலர் வாகனங்களுக்கு இந்தியாவில் எந்தவித கட்டுப்பாடும் இன்றி ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது குறித்த பட்டியல் மற்றும் விலைகளை தற்போது பார்ப்போம்:

* ஹீரோ எலக்ட்ரிக் பிளாஷ் ஈ2 என்ற இந்த எலக்ட்ரிக் வாகனத்தின் விலை ரூ.50 ஆயிரம். லித்தியம் அயன் பேட்டரியில் இயங்கும் மின்சார ஸ்கூட்டரான் இது பெட்ரோலில் இயங்கும்.
இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் மட்டுமே செல்லும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 65 கிமீ வரை செல்லும்து.

* லோஹியா ஓமா ஸ்டார் லி என்ற இந்த எலக்ட்ரில் ஸ்கூட்டர் விலை ரூ. 51,750 இந்த மின்சார ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிமீ தூரம் ஓட்டலாம்.

* ஆம்பியர் ரியோ எலைட் என்ற இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.43 ஆயிரம் விலை கொண்டது. இந்த ஸ்கூட்டரில் உள்ள கூடுதல் வசதி என்னவெனில் உங்கள் ஸ்மார்ட்போனையும் ஸ்கூட்டரிலேயே சார்ஜ் செய்து கொள்ளலாம்.

* ஹீரோ எலக்ட்ரிக் ஃபிளாஷ் எல்எக்ஸ் என்ற இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சுமார் 57 ஆயிரம் விலை கொண்டது. மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லும் இந்த ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் 85 கிமீ வரை ஓட்டி செல்லலாம்.

*& ஒகினாவா லைட் என்ற இந்த ஸ்கூட்டரின் 63,990 ஆகும். இந்த ஸ்கூட்டரை 4-5 மணிநேரம் சார்ஜ் செய்தால் 60 கிமீ வரை செல்லும்

6. டெடேல் ஈஸி பிளஸ் என்ற இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 39,999. முழுமையாக சார்ஜ் செய்தால் 60 கிமீ வரையும் மணிக்கு 25 கிமீ வேகத்திலும் செல்லும்.

seithichurul

Trending

Exit mobile version