தமிழ்நாடு

சென்னைக்கு வருகிறது எலக்ட்ரி பேருந்துகள்: ஒருமுறை சார்ஜ் செய்தால் 50கிமீ பயணம்!

Published

on

சென்னையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க தயார் என எனர்ஜி எஃபிஷியன்ஸி என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நகரங்களில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் மும்பை, புனே, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, அகமதாபாத், சூரத், கொல்கத்தா ஆகிய 9 நகரங்களில் எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன

இந்த நிலையில் எனர்ஜி எஃபிஷியன்ஸி நிறுவனத்துடன் தமிழக அரசு இணைந்து சென்னையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க திட்டமிட்டு உள்ளது. டீசல் மூலம் பேருந்துகள் ஓட்டப்படும் போது ஒரு லிட்டருக்கு 5 கிலோமீட்டர் மட்டுமே செல்லும். ஆனால் எலக்ட்ரிக் பேருந்துகள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 கிலோ மீட்டருக்கு மேல் செல்லும் என்பதும் இதனால் டீசல் செலவு 30 முதல் 40 சதவீதம் குறையும் என்றும் கூறப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் ஒரு எலக்ட்ரிக் பேருந்து ஒரு கோடி ரூபாய் செலவாகும் என்பதால் மாநில அரசுகள் சொந்தமாக எலக்ட்ரிக் பேருந்துகளை வாங்க தயக்கம் காட்டுகின்றன. இந்த நிலையில் மத்திய அரசின் அனுமதியை அடுத்து எனர்ஜி எஃபிஷியன்ஸி நிறுவனம் எலக்ட்ரிக் பேருந்துகளை வாங்கி அந்த பேருந்துகளை சென்னையில் இயக்க தயார் என்று அறிவித்துள்ளது

இதுகுறித்து தமிழக அரசு போக்குவரத்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த போவதாகவும் எனர்ஜி எஃபிஷியன்ஸி நிறுவனம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version