இந்தியா

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல், கலெக்டர்களே இனி தேர்தல் அதிகாரிகள்: சுனில் அரோரா அறிவிப்பு

Published

on

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததாக சற்றுமுன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், புதுவை மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் இன்னும் சில நிமிடங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி வரும் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா அவர்கள், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களே இனி மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது பேட்டியில் 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்த படுவதாகவும், கொரோனா வைரஸ் காலம் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

இந்த தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பெரும் பங்கு உண்டு என்று தெரிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையர் வாக்காளர்களும் மிகுந்த கவனத்துடன் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால் இனி அரசு எந்தவித அறிவிப்பையும் வெளியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது

Trending

Exit mobile version