இந்தியா

முன்னிலை நிலவரம்: மத்தியில் பாஜக(310) மாநிலத்தில் திமுக(34) முன்னிலை!

Published

on

நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுவருகிறது.

அதே நேரத்தில் தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. தற்போது முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை கூட முடிவடையாத நிலையில் முன்னிலை நிலவரங்கள் வெளிவர தொடங்கியுள்ளது. எனவே இது தொடரும் என கூற முடியாது. இந்த நிலை மாறும் என்று கூட சொல்லலாம்.

மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 509 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி 310 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 108 இடங்களிலும், மற்ற கட்சிகள் 91 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

தமிழகம் மற்றும் புதுவையை பொறுத்தவரையில் தேர்தல் நடந்த 39 தொகுதிகளில் 36 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது. இதில் திமுக தலைமையிலான கூட்டணி 33 இடங்களிலும், அதிமுக தலைமையிலான கூட்டணி 3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. அமமுக இதுவரை தனது முன்னிலை கணக்கை தொடங்கவில்லை.

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்தவரை, 22 சட்டசபை தொகுதிகளில் 16 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது. இதில் திமுக 10 தொகுதிகளிலும், அதிமுக 6 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. இதிலும் அமமுக தனது முன்னிலை கணக்கை இதுவரை தொடங்கவில்லை.

seithichurul

Trending

Exit mobile version