தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலில் கொரோனா நோயாளிகள் வாக்களிக்க அனுமதி உண்டா?

Published

on

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது என்பதும் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி செப்டம்பர் 15க்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்றாலும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் தேர்தல் ஆணையம் இன்னும் ஒரு சில நாட்களில் தேர்தல் தேதியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் கொரோனா நோயாளிகள் வாக்களிக்க அனுமதிக்கப் படுவார்களா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர் என்பதும், தேர்தலின்போது ககொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கனிமொழி எம்பி உள்பட பலர் வாக்களித்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தலிலும் கொரோனா நோயாளிகள் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் கொரோனா நோயாளிகள் வாக்களிப்பது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உள்ளாட்சி தேர்தலில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் தற்போது கூடுதலாக 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version