தமிழ்நாடு

உள்ளாட்சி பதவியை ஏலம் விட்டால்…: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

Published

on

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தலை சந்திக்க அதிமுக, திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் உள்ளாட்சி தேர்தல் பதவிகள் ஒரு சில இடங்களில் ஏலம் விடப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. போட்டியை தவிர்ப்பதற்காக கிராம பஞ்சாயத்தினர் சேர்ந்து ஒரே ஒரு நபரை மட்டும் தேர்தலில் நிறுத்தும் வகையில் பதவி ஏலம் விடப்படும் என்றும் அவரிடமிருந்து பெறப்பட்ட தொகை அந்த பகுதி மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளுக்காக செலவழிக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் பதவிகள் ஏலம் விடுவது சட்டப்படி தவறு என்றும் அவ்வாறு உள்ளாட்சி பதவிகள் தகு.ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது

உள்ளாட்சி அமைப்புகளான பதவிகளை ஏலம் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்த போதிலும் ஒரு சில இடங்களில் ஏலம் விடுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version