இந்தியா
5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு.. இன்று மாலை வெளியீடு.. எத்தனை மணிக்கு?
![election commission1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/election-commission1.jpg)
5 மாநில சட்டமன்றத் தேர்தல் எப்போது என அறிவிப்பு சனிக்கிழமை மாலை 3:30 மணிக்கு வெளியாக உள்ளது.
கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகண்ட் மற்றும் உத்திர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சக செயலாளருடன் ஆலோசித்த தேர்தல் ஆணையம், தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிப்பதில் முன்னுரிமையும் வேகமும் அதிகரிக்க வேண்டி கோரிக்கை வைத்து இருந்தது.
அது மட்டுமல்லாமல் 5 மாநில சட்டம் ஒழுங்கு குறித்தும் ஆலோசனையைத் தேர்தல் ஆணையம் நடத்தியது.
இந்நிலையில் இன்று 5 மாநில தேர்தல் எப்போது என்ற முக்கிய அறிவிப்பை மாலை 3:30 மணிக்கு வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.