தமிழ்நாடு

தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் எவ்வளவு? தேர்தல் ஆணையம் தகவல்

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து மார்ச் 12ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் இதுவரை தாக்கலான வேட்புமனுக்கள் எவ்வளவு என்பது குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இதுவரை 5002 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் இதில் ஆண்கள் மட்டும் 4,213 பேர்கள் என்றும் பெண்கள் மட்டும் 787 பேர்கள் என்றும் இரண்டு பேர்கள் திருநங்கைகள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் இன்றுவரை தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படும் என்றும் 22ஆம் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி தேதி என்றும் அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ள 5002 பேரில் பெரும்பாலானோர் சுயேச்சை வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version