இந்தியா

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு தயார்: தேர்தல் கமிஷன் அறிவிப்பால் அதிர்ச்சியில் திமுக!

Published

on

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ள தேர்தல் கமிஷன் தயார் என்றும் அரசியலமைப்பில் சில மாற்றங்கள் செய்தால் நாடு முழுவதிலும் தேர்தல் நடத்தக் கூடிய திறன் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது என்றும் தலைமை தேர்தல் ஆணையர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 மாநில தேர்தல் முடிவு தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இதில் நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனை அடுத்து வரும் 2024 ஆம் ஆண்டு நாடு முழுவதிலும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் அனைத்து மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் என்ற வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

ஆனால் இதற்கு மாநில கட்சிகள் ஒப்புக் கொள்ளுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. குறிப்பாக தற்போது 5 மாநிலங்களில் பதவி ஏற்கும் கட்சிகள் மற்றும் திமுக உள்பட எதிர்க்கட்சிகள் இதற்கு ஒப்புக் கொள்ள வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறதே.

இருப்பினும் அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்து பாராளுமன்றத்தில் சட்டத் திருத்தம் செய்தால் ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் தயாராக உள்ளதாக தலைமை தேர்தல் கமிஷனர் கூறியிருப்பது திமுக உள்பட பல கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version