தமிழ்நாடு

இனி ஏழே நாளில் கட்சி தொடங்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Published

on

இனி ஏழே நாளில் அரசியல் கட்சி தொடங்கலாம் என்றும் அரசியல் கட்சியை பதிவு செய்துவிட்டு 30 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இல்லை என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்றால் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு அதன் பின்னர் அந்த கட்சிக்கு ஏதாவது எதிர்ப்பு இருக்கிறதா? என 30 நாட்கள் காத்திருக்க வேண்டும். அந்த கட்சிக்கு ஆட்சேபனை தெரிவிப்பவர்கள் அதற்குள் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கலாம் என்றும் அதற்குள் கட்சி தொடங்குபவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்பது மரபாக இருந்தது.

தேர்தல் ஆணயம்

இந்த நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி இனிமேல் இந்தியாவில் அரசியல் கட்சி தொடங்க 7 நாட்கள் போதும் என்று அறிவித்துள்ளது. ஏழே நாட்களில் புதிய கட்சி தொடங்கலாம் என்றும் 30 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இல்லை என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் தமிழகம் உள்பட தேர்தல் நடைபெற இருக்கும் 5 மாநிலங்களிலும் இந்த நடைமுறை பொருந்தும் என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. எனவே தமிழகத்தில் தேர்தல் இன்னும் கிட்டத்தட்ட ஒரு மாதம் இருக்கும் நிலையில் புதிதாக யாராவது கட்சி தொடங்கி ஏழே நாட்களில் கட்சியை பதிவு செய்து தேர்தலில் போட்டியிடுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

Trending

Exit mobile version