தமிழ்நாடு

ராஜ்யசபா தேர்தல்: காலியாக இருக்கும் தொகுதிகள் மூன்று, ஒன்றுக்கு மட்டும் தேதி அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் மூன்று ராஜ்யசபா தொகுதி காலியாக இருக்கும் நிலையில் அவற்றில் ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ராஜ்யசபா எம்பியாக இருந்த அதிமுகவைச் சேர்ந்த முகமது ஜான் என்பவர் சமீபத்தில் காலமானார். இதனையடுத்து அந்த காலியான ராஜ்யசபா பதவிக்கு செப்டம்பர் 13-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கும் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி முடிவடைகிறது என்பதும் செப்டம்பர் 13ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் அன்று இரவே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று ராஜ்யசபா இடங்களுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்த நிலையில் அந்த கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்று தற்போது ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவித்துள்ளது என்பதும், விரைவில் அடுத்த இரண்டு தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது திமுக எம்எல்ஏக்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் மூன்று ராஜசபா தொகுதிகளிலும் திமுக கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு எம்பி தொகுதியைக் கைப்பற்ற அதிமுக கூட்டணி தீவிர முயற்சி செய்யும் என்றும் அந்த முயற்சி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ராஜ்யசபாவில் ஏற்கனவே எதிர்க்கட்சிகள் வலுவாக உள்ள நிலையில் தற்போது மேலும் 3 எம்பிகள் திமுகவுக்கு கிடைத்தால் மேலும் வலுவாக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version