இந்தியா

பைக்கில் 1 கிமீ இழுத்து செல்லப்பட்ட முதியவர்.. ஈவு இரக்கமில்லா இளைஞர் கைது: அதிர்ச்சி வீடியோ

Published

on

பெங்களூரு நகரில் பைக்கில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு முதியவர் ஒருவரை இளைஞர் ஒருவர் பைக்கில் தரதரவென சாலையில் இழுத்துச் சென்ற வீடியோ பார்ப்பதற்கே பதைபதைக்க வைத்துள்ளது.

பெங்களூரில் முதியவர் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தபோது தவறான திசையில் வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் காரின் மீது மோதியுள்ளார். இதனை அடுத்து அந்த பைக்கை பிடிப்பதற்காக கீழே இறங்கிய கார் டிரைவர், இளைஞரை பிடிக்க முயற்சிக்கும்போது அவரை இழுத்துக் கொண்டே அந்த இளைஞர் பைக்கில் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை சென்றார்.

அவருக்கு பின்னால் வந்த ஆட்டோ மற்றும் கார் ஆகியவற்றில் வந்தவர்கள் அந்த இளைஞரை எச்சரித்த போதிலும் அந்த இளைஞர் அதை கண்டுகொள்ளாமல் சென்று கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் அவரை மடக்கிய பொதுமக்கள் காவல்துறையினிடம் ஒப்படைத்தனர். இது குறித்து அந்த முதியவர் கூறும் போது தனது காரை இடித்துவிட்டு சென்ற அவரை பிடிப்பதற்கு முயன்றதாகவும் ஆனால் அவர் நிறுத்தாமல் தன்னை ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த இளைஞரின் பெயர் கோவிந்தராஜ் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பைக்கில் சுமார் 1 கிமீ தூரம் முதியவர் இழுத்து செல்லப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரல் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த வீடியோவை பார்க்கும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் படுகாயம் அடைந்த முதியவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version