தமிழ்நாடு

ரேசன் கடைகளுக்கு நேரில் வர தேவையில்லை: அதிரடி அறிவிப்பு

Published

on

பெரியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க நேரில் வரத் தேவையில்லை என்றும் அவர்களுடைய அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அதிரடியாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமமாக இருப்பதால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இது குறித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ’நியாயவிலை கடைகளுக்கு வர இயலாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களால் அங்கீகரிக்கப்பட்டவர்களை கடைக்கு அனுப்பி பொருட்களை வாங்கிக் கொள்ளும் நடைமுறையை ஏற்கனவே அமலில் உள்ளது.

ஆனால் இந்த உத்தரவை ஒரு சில நியாய விலை கடை ஊழியர்கள் பின்பற்றவில்லை என்று புகார் வந்துள்ளது. இந்த புகார்களின் அடிப்படையில் தற்போது மீண்டும் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மூலம் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதற்கான படிவத்தை நியாயவிலைக் கடைகளில் வாங்கி பூர்த்தி செய்து அவர்களிடமே பொருள்களை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை அனைத்து ரேஷன் கடை ஊழியர்களும் பின்பற்ற வேண்டும். மேலும் பொது விநியோக திட்டத்தை சாராத பொருட்களை எந்த காரணம் கொண்டும் விற்பனை செய்யக்கூடாது என்று அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளால் அங்கீகரிக்கப்பட்ட நபர் நியாயவிலை கடைகளில் விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து கொண்டால் அவர்களே அந்த பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்பது உறுதியாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version