உலகம்

டுவிட்டரை அடுத்து இன்னொரு நிறுவனம்: எலான் மஸ்க் குறி வைத்தது எதற்கு தெரியுமா?

Published

on

உலகின் முன்னணி சமூக வலைத்தளமான டுவிட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் 43 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கி உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

மேலும் டுவிட்டரை அவர் மிகவும் வித்தியாசமாக மாற்ற போவதாகவும் போலியான ஃபாலோயர்கள் வைத்துள்ளவர்களுக்கு சரியான ஆப்பு வைக்க போவதாகவும் கூறப்படுகிறது. எனவே இனி உண்மையான ஃபாலோயர்களுடன் மட்டுமே டுவிட்டர் இயங்கு என்று எதிர்பார்க்கப்படுகிறது .

மேலும் டுவிட்டரை மக்களின் நம்பிக்கைக்கு உள்ளதாக மாற்ற வேண்டும் என்றும் அது அரசியல் ரீதியாக நடுநிலையாக இருக்க வேண்டும் என்றும் அப்படி இருந்தால்தான் தீவிர வலதுசாரிகள் இடதுசாரிகள் கோபம் அடைவார்கள் என்றும் அவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் டுவிட்டரை அடுத்து அவர் கொக்கோ கோலா நிறுவனத்தை வாங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வந்த நிலையில் இதனை அவர் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். கொக்கோ கோலா நிறுவனத்தை வாங்க திட்டமிட்டிருப்பதாகவும், அந்நிறுவனத்தை ஏற்கனவே இருந்த கோகைன் என்ற நிறுவனத்திடம் சேர்க்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

இதனையடுத்து அவர் எத்தனை ஆயிரம் கோடிக்கு கோலா நிறுவனத்தை வாங்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இதேபோல் உலகில் முன்னணியாக இயங்கிவரும் நிறுவனத்தை ஒவ்வொன்றாக அவர் வாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

 

 

seithichurul

Trending

Exit mobile version