வணிகம்

இனி டுவிட்டரை பயன்படுத்தனும்ன்னா காசு கொடுக்கணும்: எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு

Published

on

இனி ட்விட்டரை பயன்படுத்த வேண்டும் என்றால் கட்டணம் கட்டவேண்டும் என எலான் மஸ்க் அறிவித்திருப்பது டுவிட்டர் பயனாளிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ட்விட்டர் சமூக வலைதளத்தை சமீபத்தில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதனை அடுத்து அவர் டுவிட்டரில் பல மாற்றங்கள் கொண்டு வருவார் என்றும் குறிப்பாக எடிட் பட்டன் கொண்டு வர விருப்பம் தெரிவித்து வருவதாகவும் கூறப்பட்டது .

இந்த நிலையில் திடீரென டுவிட்டரை கட்டண இணையதளமாக மாற்றம் செய்யவிருப்பதாக எலான் மஸ்க் என அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதே நேரத்தில் சாதாரண மக்களுக்கு டுவிட்டர் எப்போதும்போல் இலவச சேவையாக இருக்கும் என்றும் வணிகரீதியாக பயன்படுத்துபவர்கள் மற்றும் அரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கங்களுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் .

ஆனால் சாதாரண மக்களுக்கும் கட்டணம் வசூலிக்க அவர் தயங்க மாட்டார் என்றும் எதிர்காலத்தில் அது நடக்கும் என்றும் டிவிட்டர் பயனாளிகள் அதிர்ச்சியுடன் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

44 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்த ஒரு தொழிலதிபர் இலவசமாக சேவை செய்வாரா? கட்டணம் பெறத்தான் செய்வார் என்றும் ஒரு சிலர் தெரிவித்து வருகின்றனர்.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version