உலகம்

சொந்த சேட்டிலைட் மூலம் இலவச இண்டர்நெட்: எலான் மஸ்க் அறிவிப்பு

Published

on

சொந்த சாட்டிலைட் மூலம் இலவச இண்டர்நெட் வசதி செய்து தர இருப்பதாக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அவர்கள் அறிவித்துள்ளது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் பசிபிக் பெருங்கடலில் திடீரென ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக டோங்கோ என்ற தீவு கிட்டத்தட்ட முழுவதுமாக அழிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தீவில் உள்ள மக்கள் அடிப்படை வசதிகூட இல்லாமல் உள்ளனர் என்றும், எரிமலை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட சுனாமியால் அந்த தீவு மக்கள் அனைத்து வாழ்வாதாரங்களை இழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தொலை தொடர்பு வசதி சுத்தமாக இல்லை என்றும் இன்டர்நெட் வசதியும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் டோங்கோ மக்களின் கஷ்டத்தை அறிந்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அவர்கள் அந்த தீவு மக்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் இலவசமாக இன்டர்நெட் வசதியை செய்து தர முன் வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தபோது, தனக்கு சொந்தமான சேட்டிலைட் போதும் ஸ்டார் லிங் என்ற தொழில்நுட்பத்தில் டோங்கோவில் உள்ள மக்கள் அனைவரும் இலவசமாக இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார். இதனை அடுத்து அந்த தீவு மக்கள் எலான் மஸ்க் அவர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version