தமிழ்நாடு

மணிப்பூர் மாநில ஆளுநராக தமிழக பாஜக பிரபலம் நியமனம்

Published

on

ஏற்கனவே தமிழக பாஜக பிரபலமாக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநராக இருந்து வரும் நிலையில் இன்னொரு தமிழக பாஜக பிரபலம் மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழகத்தின் முதுபெரும் பாஜக தலைவர்களில் ஒருவரான இல கணேசன் அவர்கள் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. இவர் தமிழக பாஜகவில் பல ஆண்டுகள் இருந்து வருகிறார் என்பதும் பாராளுமன்ற தேர்தலை சந்தித்த என்பதும் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மணிப்பூர் மாநில ஆளுநராக இல கணேசன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் உறுதி செய்துள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவர் இல கணேசன் அவர்கள் ஒரு அனுபவம் உள்ள ஒரு அரசியல்வாதி. அவர் சுதந்திர இந்தியாவிற்கு முன்பாகவே அதாவது 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி அன்று பிறந்தவர். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் தமிழக பாஜகவில் இருக்கக்கூடிய மிக முக்கிய தலைவர்களில் முதன்மையானவர். பாஜக தேசிய தலைவராக பணியாற்றியது மட்டுமின்றி 1991ஆம் ஆண்டு பாஜக மாநில அமைப்புச் செயலாளராக இருந்தவர்.

கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் தென்சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு இருக்கிறார். ஆனால் அந்த தேர்தலில் தோல்வி அடைந்த காரணத்தினால் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பல்வேறு அரசியல் பணிகளில் ஈடுபட்டிருந்த இல கணேசன் அவர்களுக்கு தற்போது மேலும் ஒரு பெருமை சேர்க்கக் கூடிய வரையில் மணிப்பூர் மாநிலத்தில் என்ற உயரிய பதவியை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. இதற்கான ஒப்புதலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் சற்றுமுன் வழங்கியிருக்கிறார். எனவே விரைவில் இல கணேசன் அவர்கள் அந்த அதற்கான பொறுப்பினை ஏற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Trending

Exit mobile version