தமிழ்நாடு

நாமக்கல்லில் சரியும் முட்டை விலை: கொரோனா கட்டுப்பாடுகள் காரணமா?

Published

on

நாமக்கல்லில் கடந்த சில நாட்களாக முட்டை விலை சரிந்து வரும் நிலையில் இன்று முட்டை விலை மேலும் சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூபாய் 4.70 என இருந்த நிலையில் இன்று 20 காசுகள் குறைந்து ரூ.4.50 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

நாமக்கல்லில் முட்டை விலை திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதால் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல்லில் முட்டை விலை சரிந்துள்ளதை அடுத்து இன்று ரூபாய் 4.50 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

அதேபோல் சென்னையில் முட்டை விலை ரூபாய் 5.00 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முட்டை விலை மேலும் குறைய வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் முட்டை கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா கட்டுப்பாடுகளால் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் விலை குறைப்பு என கோழிப் பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version