தமிழ்நாடு

பறவை காய்ச்சல் எதிரொலி! நாமக்கலில் முட்டைகள் தேக்கம்.. விலை குறைந்தது

Published

on

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியாக முட்டை விலை சரிந்தது. நாமக்கலில் 1.5 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தேக்கமாகியுள்ளன.

கேரளா மாநிலத்தில் பறவை காய்ச்சல் நோய் கடுமையாக உள்ளது. பறவை காய்ச்சல் பரவாமல் இருப்பதற்காக, பண்னைகளில் வளர்க்கப்படும் பறவைகள் அழிக்கப்பட்டன. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு முட்டைகள், கோழிகள் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

இதற்காக கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான தென்காசி வரையில், எல்லைப் பகுதிகளில் காவல்துறையினர் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். லாரிகள், சரக்கு வாகனங்களில் கடும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பறவைக்காய்ச்சல் எதிரொலியாக முட்டை விலை ஒரே நாளில் 25 பைசா வரையில் குறைந்துள்ளது. நாமக்கலில் 1.50 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

Trending

Exit mobile version