சினிமா செய்திகள்

ஈஸ்வரன் பட பட்ஜெட், வசூல் எவ்வளவு தெரியுமா?

Published

on

ஈஸ்வரன் திரைப்படத்தின் பட்ஜெட், மொத்த வசூல் உள்ளிட்ட விவரங்கள் வெளிவந்துள்ளன.

சுசீந்திரன் இயக்கத்தில், சிம்பு நடிப்பபில் பொங்கலன்று வெளிவந்த ஈஸ்வரன் திரைப்படத்தின் வர்த்தக ரீதியிலான தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன்படி, இந்தப் படம் எடுக்கும் போது சிம்புவுக்கு சம்பளம் 8 கோடி ரூபாய், பட தயாரிப்பு மற்றும் இயக்க பணிக்காக சுசீந்திரனுக்கு 9.50 கோடி என மொத்தம் 17.50 கோடி ரூபாயாக இருந்தது.

பின்னர் தெலுங்கு டப்பிங் உரிமம் எதிர்பார்த்த அளவில் விலை போகவில்லை. இதே போல் சாட்டிலைட் டிஜிட்டல் உரிமமும் சரியான அளவில் இல்லை. அத்துடன் திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் சிம்புவின் சம்பளம் 3 கோடி ரூபாய் வரையில் தளர்த்தப்பட்டது.

தியேட்டர் கலெக்ஷனைப் பொறுத்த அளவில் செங்கல்பட்டு மற்றும் சில நகரங்களைத் தவிர்த்து  5.45 கோடி ரூபாய் கலெக்ஷன் பெற்றது. செங்கல்பட்டு அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2.25 கோடி ரூபாய் கலெக்ஷன்ஆனது. ஓவர்சிஸ் ரைட்ஸ் 1.60 கோடி ரூபாய்க்கு போனது. இவ்வாறு மற்ற வியாபாரங்களோடு சேர்த்து தயாரிப்பாளருக்கு 1.28 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது.

தமிழகத்தில் 236 திரையரங்குகளில் ஈஸ்வரன் திரைப்படம் திரையிடப்பட்டது. ஒட்டு மொத்தமாக பார்த்தால் ஈஸ்வரன் திரைப்படத்தில் கிடைத்த லாபம் 1.28 கோடி ரூபாயாக இருந்தது, திரையிடப்பிறகு ஏற்பட்ட நஷ்டம் 75 லட்சம் போக 53 லட்சமாக தற்போது உள்ளது.

Trending

Exit mobile version