தமிழ்நாடு

அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க அனுமதி: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சிக்கல்

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 10ஆம் வகுப்பு தேர்வு உட்பட கிட்டத்தட்ட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பதும், 12ஆம் வகுப்பு தேர்வு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன என்பதும் தெரிந்ததே. இருப்பினும் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடைபெற்று முடிந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும் என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இருந்த நிலையில் தற்போது இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு பள்ளிகளில் 2021 – 2022 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டுக்கான சேர்க்கையை நடத்த அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண்களை வழங்குவது என்பதில் மட்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை விரைவில் விரிவான விளக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மற்ற வகுப்புகளுக்கு அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் என பள்ளிக் கல்வி துறை அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version