தமிழ்நாடு

நாங்க ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் ரத்து – ஸ்டாலின் அதிரடி!

Published

on

திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமைந்தால், மாநிலத்தில் வாங்கப்பட்டு இருக்கும் அனைத்துக் கல்விக் கடன்களும் ரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் வர உள்ளதையொட்டி, ஸ்டாலின், திமுக சார்பில் ஒருங்கிணைக்கப்படும் ‘மக்கள் கிராம சபைக் கூட்டங்களில்’ தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார். அப்படி அவர் இன்று ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற போது சிறப்புரை ஆற்றினார்.

‘மாணவர்கள் தங்கள் கல்விக்காக வங்கியில் வாங்கி இருக்கக் கூடிய கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்று நாடாளுமன்றத் தேர்தலின் போதே திமுக சார்பில் நாங்கள் தெரிவித்தோம். இப்போதும் அதையே சொல்கிறோம். சட்டமன்றத் தேர்தல் முடிந்து வெற்றி பெற்று ஆட்சியமைத்தப் பின்னர், மாநிலத்தில் உள்ள அனைத்துக் கல்விக் கடன்களும் முழுவதுமாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்’ என உரையின் போது தெரிவித்தார் ஸ்டாலின். அவரின் இந்த அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version