தமிழ்நாடு

4 நாட்கள் விடுமுறை: தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பள்ளிக்கல்வித்துறை!

Published

on

பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சித்திரை தமிழ்புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விடுமுறை நாட்களில் ஒரு சில தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வெளியிடப்பட்டுள்ளது என்றும் விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக எழுந்த புகாரை அடுத்து பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version