தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு ரூ.14 லட்சம் வரை கடனுதவி: தமிழக அரசு அறிவிப்ப்பு!

Published

on

தமிழகத்தில் திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்பது தெரிந்ததே. அதேபோல் அவ்வப்போது சம்பளமும் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி ஆசிரியர்களுக்கு 14 லட்ச ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆசிரியர்களுக்கு ரூபாய் 6 லட்சம் முதல் 14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என சற்றுமுன் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் ஆசிரியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆசிரியர்கள் தங்கள் முக்கிய செலவான திருமணம் செய்யவும், புதிய பைக் மற்றும் கார் வாங்கவும் கடன் உதவி பெற்றுக் கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை மூலம் வெளியிட்டுள்ளார். இந்த கடனுதவி திட்டத்தை ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசே கடன் வழங்குகிறது என்பதால் மிகக்குறைவாக வட்டி இருக்கும் என்பதும் அதனால் திருமணம் உள்ளிட்ட முக்கிய செலவுகளுக்கு வெளியில் அநியாய வட்டிக்கு ஆசிரியர்கள் கடன் வாங்க தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கார், பைக் ஆகியவை வாங்கும்போது தனியார் ஃபைனான்சியர் மூலம் பணம் பெற்று வாங்கினால் அதிக வட்டி இருக்கும் என்பதும், ஆனால் அரசிடம் மிக குறைந்த வட்டியில் அந்த கடன் உதவியை பெற்றுக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version