தமிழ்நாடு

இன்றும் வினாத்தாள்கள் கசிவு: கேலிக்கூத்தாகும் திருப்புதல் தேர்வு!

Published

on

நேற்று முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் இந்த தேர்வுகளில் வினாத்தாள்கள் நேற்று முன்தினம் கசிந்ததாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றும் வினாத்தாள்கள் கசிந்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு நேற்று முதல் அந்த தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை எழுத மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ள நிலையில் திருவண்ணாமலையில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளில் திருப்புதல் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் வினாத்தாள்கள் கசிந்ததாக கூறப்பட்ட நிலையில் பள்ளி கல்வித்துறை இது குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டது. இந்த விசாரணையில் திருவண்ணாமலையில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகள்தான் வினாத்தாள்கள் கசிந்ததற்கு காரணம் என்பது உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் இன்று நடைபெற இருக்கும் திருப்புதல் தேர்வுகளின் வினாத்தாள்களும் அதே 2 திருவண்ணாமலை பள்ளிகள் மூலம் கசிந்ததாக வந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு திருப்புதல் தேர்வு வினாத் தாள்களையே பாதுகாப்பாக வைக்க முடியாவிட்டால் பொதுத்தேர்வு எப்படி நடத்த முடியும் என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனதில் எழுந்துள்ளது. மொத்தத்தில் இந்த திருப்புதல் தேர்வு ஒரு கேலிக் கூத்தாகி விட்டது என்று சமூக ஆர்வலர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Trending

Exit mobile version