தமிழ்நாடு

இந்த ஆண்டு பொதுத்தேர்வு, முழு ஆண்டு தேர்வு உண்டா? பள்ளிக்கல்வித்துறை தகவல்!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 40 நாட்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் நாளை மீண்டும் 1ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வும், 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு உண்டு என பள்ளிக்கல்வித்துறை உறுதிபட அறிவித்துள்ளது.

1 முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் கட்டாயம் என்றும் அதே போல் மாணவர்களை ஆண்டு இறுதித்தேர்வுக்கும், பொது தேர்வுக்கும் தயார்படுத்த வேண்டும் என்றும் அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா தடுப்பு வழி முறைகளை முறையாக பின்பற்றி வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் வரும் மார்ச் மாதம் திட்டமிட்டபடி பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் அதனை அடுத்து மற்ற வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

எனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வு இல்லாமல் ஆல் பாஸ் என்ற நிலை இந்த ஆண்டு இருக்காது என்றும் மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version