தமிழ்நாடு

12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள்: வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

Published

on

12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

வேதியியல் செய்முறை தேர்வின்போது பிப்பெட் என்னும் உபகரணத்தை மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது எனவும் தாவரவியல் மற்றும் உயிரியல் பாட செய்முறைத் தேர்வுகளில் மைக்ரோஸ்கோப் பயன்படுத்தக்கூடாது எனவும் மேலும் பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள் ஆய்வகத்தில் எரியும் தன்மை உள்ள பொருட்களின் அருகே வைக்க வேண்டாம் எனவும் செய்முறை தேர்வின்போது ஆசிரியர்கள் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேர்வுக்கு செல்வதற்கு முன் கைகளை சோப்பு கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறியுள்ள தேர்வுத் துறை தேர்வு முடிந்த பிறகும் மாணவர்கள் கைகளை நன்கு கழுவ வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

உரிய பாதுகாப்பு விதிமுறைகளுடன் செய்முறை தேர்வு நடத்த தேர்வுத்துறை உத்தரவிட்டிருக்கிறது. கல்வித்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த மாத இறுதியில் கொரோனா நிலவரத்தின்படி எழுத்துத் தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

seithichurul

Trending

Exit mobile version