தமிழ்நாடு

1-8 வகுப்புகளுக்கு நேரடி வகுப்பு ரத்தானதால் மாற்று ஏற்பாடு செய்த பள்ளிக்கல்வித்துறை!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை சமீபத்தில் அறிவித்தார் என்பதும் அவற்றில் ஒன்று ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்பு ரத்து செய்யப்படுவதாகவும் ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்றும் அறிவித்திருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் 1-8 வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆன்லைன் வகுப்பு என்ற அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஜனவரி 10-ஆம் தேதி வரை இல்லம் தேடி கல்வி திட்டம் 1-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் என்றும் அவர் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதே நேரத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை அரசு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வகுப்பிற்கு 20 மாணவர்கள் மட்டுமே உள்ள நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version