தமிழ்நாடு

எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படாது: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

Published

on

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்கேஜி யூகேஜி வகுப்புகள் நிறுத்தப்படும் என்று வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 2381 பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதற்கு பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

தனியார் பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகளில் சேர்ப்பதற்கு ஆயிரக்கணக்கில் இலட்சக்கணக்கில் உன் பெற்றோர்கள் பணம் கட்டி வந்த நிலையில் இலவசமாக எல்கேஜி யுகேஜி சேர்ந்ததால் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் திடீரென எல்.கே.ஜி , யூகேஜி வகுப்புகள் நிறுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியதாக தகவல் வெளியானதால் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்படுவதாகவும்தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி எல்கேஜி யூகேஜி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் எல்கேஜி யுகேஜி நிறுத்தப்படுவதாக வெளிவந்த தகவல் தவறானது என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த கல்வி ஆண்டில் எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது என்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

seithichurul

Trending

Exit mobile version