தமிழ்நாடு

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் ரத்தா? அவசர ஆலோசனை

Published

on

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு மே 3ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிளஸ்டூ தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்ற அறிவிப்பும் வெளியானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகம் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் பிளஸ் டூ தேர்வு திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வை ஒத்தி வைக்கலாமா என்ற ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் இது குறித்து 38 மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவசர ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த ஆலோசனை முடிந்தபின் பிளஸ் டூ தேர்வு தள்ளி வைக்கப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்த முடிவு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version