தமிழ்நாடு

அரசு பள்ளியில் மகனை சேர்த்த பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்: சிறப்பான முன்னுதாரணம்!

Published

on

அரசு பள்ளியில் தனது மகனை சேர்த்து ஒரு சிறப்பான முன்னுதாரணமாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் இருப்பதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மிடில்கிளாஸ் பெற்றோர்களே தனியார் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் பல பெற்றோருக்கு எழுந்து உள்ளது.

இந்த நிலையில் அரசுப் பள்ளிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு என்பவர் தனது மகனை அரசு நடுநிலைப்பள்ளிகள் சேர்த்துள்ளார். மேலும் அவரே நேரில் வந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பள்ளி முதல்வரிடம் தனது மகனை சேர்க்க கோரிக்கை விடுத்தார்.

அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தனது மகனை அரசு பள்ளிகள் சேர்ப்பதாக அவர் கூறினார் .

பள்ளிக்கல்வித்துறை இயக்குனரே தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என முன்னுதாரணமாக இருந்து வரும் நிலையில் மற்ற அரசு ஊழியர்களும் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிக்கு மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version