தமிழ்நாடு

10, 12-ம் மாணவர்களுக்கு தேர்வு: பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி முடிவு

Published

on

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு ஒவ்வொரு மாதமும் தேர்வு வைக்க பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக முடிவு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கவில்லை என்பதும் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பொதுத்தேர்வுகள் நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பதும் மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நீண்டு கொண்டே இருப்பதால் இன்னும் பள்ளிகள் திறக்கவில்லை என்பதும் தற்போது ஆன்லைன் மூலம் தான் வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மூன்றாவது அலை நான்காவது அலை என தொடர்ந்து கொண்டே இருந்தால் இந்த ஆண்டும் பள்ளிகள் திறக்கப்படாமல், பொதுத் தேர்வுகளும் நடத்தப்படாமல் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்து உள்ளது. இதனை அடுத்து நடப்பு கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து ஒவ்வொரு மாத இறுதியிலும் வாட்ஸ்அப் மூலம் அலகுத் தேர்வு நடத்த வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version