தமிழ்நாடு

அதிகரிக்கும் கொரோனா: பள்ளிக்கல்வித்துறை அதிகாரியின் சுற்றறிக்கை!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் பள்ளி கல்வித்துறை செயலாளர் முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு என்று சுமார் 900ஐ இன்று நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஆயிரக்கணக்கான கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வந்துவிடுமோ என்ற அச்சம் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. குறிப்பாக சென்னையில் மிக அதிகமாகவும், வேகமாகவும் கொரோனா பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை செயலாளர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கொரோனா அறிகுறி கொண்ட மாணவர்கள் வீட்டிலேயே இருக்கலாம் என்றும், தினமும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் மாஸ்க் மற்றும் தனிமனித இடைவெளியை அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version