தமிழ்நாடு

ஒமைக்ரான் வைரஸ் எதிரொலியால் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளா? பள்ளிகல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

Published

on

இந்தியாவில் ஏற்கனவே ஐந்து பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவிய நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை சில புதிய நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவும் வாய்ப்பு இருப்பதால் பள்ளிக்கல்வித்துறை ஒரு சில கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டுப்பாடுகள் குறித்த தகவல்கள் பின்வருமாறு:

1 முதல் 8ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்; நேரடியாகவும், ஆன்லைனிலும் வகுப்புகள் நடைபெறலாம்.

பள்ளிக்குள் நுழையும் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்டு, அதிக வெப்பநிலை இருப்போரை அனுமதிக்கக் கூடாது.

ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்; மாணவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும்.

இறைவணக்கக் கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.

நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது.

seithichurul

Trending

Exit mobile version