தமிழ்நாடு

ஆயுதபூஜைக்கு பள்ளிகள் எத்தனை நாள் விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Published

on

நாளை முதல் ஆயுதபூஜை விடுமுறை தொடங்க இருக்கும் நிலையில் பெரும்பாலான அரசு அலுவலங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் விடுமுறை அளித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பள்ளிகளுக்கு ஆயுத பூஜை விடுமுறை எத்தனை நாள் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிகளுக்கு ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை என்றும் சனிக்கிழமை பள்ளி இயங்கும் என்றும் கூறப்பட்டு வந்தது.

ஆனால் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விடுமுறையாக வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை இருக்கும் நிலையில் சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் அறிவித்துள்ளது.

இதனை அடுத்து ஆயுதபூஜை விடுமுறையாக பள்ளிகளுக்கு வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 14 15 ஆகிய இரண்டு தினங்கள் அரசு விடுமுறையாக இருப்பதால் சனிக்கிழமையும் அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் பள்ளி கல்வித்துறை இந்த விடுமுறையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version