தமிழ்நாடு

10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அனுமதி கிடையாது: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Published

on

பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு ஆகிய மூன்று வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி பீரியட் தொடங்கப்பட அனுமதி என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்ளித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்ட காலத்திலும் பிடி பீரியட் என்று கூறப்படும் உடற்கல்வி பீரியடுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் மூன்றாவது அலைக்கு பின்னர் பள்ளி திறக்கப்பட்டு சில மாதங்கள் ஆன பின்னர் தற்போதுதான் உடற்கல்வி பீரியடுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பிடி பீரியடில் மாணவர்கள் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஆனால் அதே நேரத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளதால் அவர்களுக்கு மட்டும் உடற்கல்வி பாடத்திட்டம் பீரியடில் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அடுத்த கல்வி ஆண்டு முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பிடி பீரியட் அனுமதிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது

 

seithichurul

Trending

Exit mobile version