தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியின் ராஜினாமாவை ஏற்றார் ஆளுநர்; அடுத்து என்ன?

Published

on

தமிழக முதல்வராக பதவி வகித்த வந்த எடப்பாடி பழனிசாமியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

15வது சட்டமன்றப் பதவிக் காலம் முடிவு பெற்றுள்ளதாலும், 16வது தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உள்ளதாலும் எடப்பாடி பழனிசாமி தனது முதல்வர் பதவியை இன்று காலை ராஜினாமா செய்வதாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார்.

அதை ஏற்றுக் கொண்ட ஆளுநர் புரோகித், ‘தமிழக அரசு, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அவரது அமைச்சரவையின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்கிறது. அடுத்த மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை முதல்வரும், அமைச்சரவையும் தொடர்ந்து செயல்பட வேண்டும். இதன் மூலம் 15வது தமிழக சட்டசபையை ஆளுநர் கலைத்துள்ளார்’ என்று செய்திக் குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.

வரும் 7 ஆம் தேதி, மிகவும் குறைவான நபர்கள் கொண்ட எளிமையான பதவியேற்பு விழாவில், தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொள்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் எனத் தெரிகிறது.

seithichurul

Trending

Exit mobile version